400-க்கு மேல் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவிகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை அண்ணா சாலை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளி மாணவிகளில் 8 பேர் 500-க்கு 400-க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவியரை வாழ்த்தும் சென்னை அண்ணாசாலை பார்வையற்றோருக்கான சிறுமலர் பள்ளி வகுப்பாசிரியைகள்.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 9 பார்வையற்ற மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்; இதில் 8 பேர் 400-க்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக ஆசிரியை ரெஜினா கூறினார்.
பார்வையற்ற மாணவிகள் ஃபரிதா (476), நான்சி மேரி (464), ஷர்மிளா (451) உள்ளிட்ட 8 பேர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவிகள் ஃபரிதா, நான்சி ஆகியோர் சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com