புகாரை பெறாத காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை அருகே திருவேற்காட்டில் தங்கச் சங்கிலி பறிப்பு தொடர்பான புகாரை பெறாத காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை

சென்னை அருகே திருவேற்காட்டில் தங்கச் சங்கிலி பறிப்பு தொடர்பான புகாரை பெறாத காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஹெலன் கிறிஸ்டினா (30). ராமாபுரம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், இரு நாள்களுக்கு முன்பு மதுரவாயல் புறவழிச்சாலையில் மொபெட்டில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கிறிஸ்டினாவை தாக்கி அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கிறிஸ்டினா குடும்பத்தினர், திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரன், அவர்களிடம் புகாரைப் பெறாமல் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல் காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை செய்தார். அதில் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் புகார் பெறாமல் கிறிஸ்டினா குடும்பத்தினரை சிரமப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆணையர் விசுவநாதன், ஆய்வாளர் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com