உடற்பயிற்சி அலுவலர் தேர்வு: 2,500 பேர் பங்கேற்பு

சென்னை உள்பட மூன்று இடங்களில் காலியாகவுள்ள 27 விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உள்பட மூன்று இடங்களில் காலியாகவுள்ள 27 விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வை 2,500-க்கும் மேற்பட்டோர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் விடுதி கண்காணிப்பாளருடன் இணைந்த 27 உடற்பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு 3,458 பேர் விண்ணப்பத்திருந்தனர். அவர்களில் 506 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் 1,072 பேரும், கோவையில் 711 பேரும், மதுரையில் 1,169 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேர்வுக்காக சென்னை, மதுரையில் தலா 4 மையங்களும், கோவையில் 3 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com