இணையதளத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் வெளியீடு

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான முதல்தாள் தேர்வை 2.41 லட்சம் பேரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வை 5.12 லட்சம் பேரும் எழுதினர்.
இத்தேர்வுகளுக்கான விடைகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், உரிய ஆதாரங்களுடன் வரும் 27-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் trb.tn.nic.in  மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com