"எய்ம் ஃபார் சேவா' தொண்டு நிறுவனத்துக்கு மகாவீரர் விருது

சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட தன்னார்வ சேவை நிறுவனமான "எய்ம் ஃபார் சேவா' நிறுவனம் மகாவீரர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட தன்னார்வ சேவை நிறுவனமான "எய்ம் ஃபார் சேவா' நிறுவனம் மகாவீரர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கிராமப்புற மக்களுக்குக் கல்வி அளிப்பதில் சிறந்த சேவை அளித்து வருவதைக் கெளரவிக்கும் வகையில் விருதுக்கு எய்ம் பார் சேவா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மஹாவீரர் அறக்கட்டளைத் தலைவர் சுகல்சந்த் ஜெயின் மேலும் கூறியது: மகாவீரர் விருதுகளுக்கு மேலும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கொல்லாமை மற்றும் புலால் உண்ணாமை பிரிவின் கீழ் ராஜஸ்தானைச் சேர்ந்த பிராணிகள் நல அறக்கட்டளை, மருத்துவப் பிரிவில் உயர்ந்த சேவைக்காக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.சி. நாஹாதா, சமூக சேவைப் பிரிவின் கீழ் ஹரியானாவைச் சேர்ந்த அர்ப்பணா ஆராய்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் விருதுகளைப் பெறுகின்றன. இந்த விருதுகள் தலா ரூ.10 லட்சம் ரொக்கம், நினைவுப் பரிசு, பட்டயம் ஆகியவை அடங்கியது.
தேர்வுக் குழு: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தேர்வுக் குழு தலைவராகவும், குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி, இந்திய அரசின் முன்னாள் அமைச்சரவை செயலாளர் பிரபாத் குமார் உள்ளிட்டோரும் இடம் பெற்று விருதுக்கு உரியோரைத் தேர்வு செய்தனர்.
கொல்லாமை புலால் உண்ணாமை, கல்வி, மருத்துவம், சமுதாய நலம் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணிபுரிவோரை அடையாளம் கண்டு அவர்களைப் போற்றிப் பாராட்டும் நோக்கத்துடன் பகவான் மகாவீரர் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com