குறைகளைத் தீர்க்குமா மெட்ரோ ரயில் நிர்வாகம்?

சென்னை மெட்ரோ ரயில் சேவை பொது மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தாலும் சில குறைகள் இருப்பதால் சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில் பயணம் முழு திருப்தியை அளிக்கவில்லை.
மெட்ரோ ரயில் நிலையங்களில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு.
மெட்ரோ ரயில் நிலையங்களில் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு.

சென்னை மெட்ரோ ரயில் சேவை பொது மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தாலும் சில குறைகள் இருப்பதால் சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில் பயணம் முழு திருப்தியை அளிக்கவில்லை.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர், அதன்பின்னர் சின்னமலை- விமான நிலையம் அதனை தொடர்ந்து பரங்கிமலை வரை உயர் பாதையில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதையில் முதல் முதலாக திருமங்கலம் - நேரு பூங்கா இடையே கடந்த 14-ஆம் தேதி மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. வார இறுதி நாள்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதால் பயணத்துக்கான ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்மார்ட் கார்டு வாங்குவதற்கு ஒருவர் 30 நிமிடமாவது கவுன்ட்டர் முன் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.
ரயில் நிலையங்களில் இரண்டாம் தளத்தில் அமருவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், முதல் தளத்தில் இருக்கைகள் இல்லை. வயதானவர்கள், கர்ப்பிணிகள் யாரும் உட்கார முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் முதல் தளத்தில் குறைந்தபட்சம் சில இருக்கைகளாவது வைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஸ்மார்ட் கார்டு குழப்பங்கள்: உயர் நிலை மெட்ரோ ரயில் நிலையங்களில் எந்தப் பகுதிக்கு செல்ல வேண்டுமோ அதற்கான பணத்தைக் கொடுத்து விட்டு டோக்கன் பெற்று பயணத்தை நிறைவு செய்யும் போது அங்குள்ள பெட்டியில் போட்டு விட்டு வெளியே வரவேண்டும். ஆனால் சுரங்கப் பாதையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.100 மதிப்புள்ள இந்தக் கார்டை கவுன்ட்டரில் பெற்றுக் கொண்டுதான் பயணம் செய்ய முடியும். பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இந்தக் கார்டை ஓர் ஆண்டிற்கு பயன்படுத்தலாம்.

அபராதமும், அலைச்சலும்

நேரு பூங்கா சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு உயர்நிலைப் பாதை ரயில் நிலையத்துக்குச் சென்றால் அங்குள்ள வெளியேறும் வழியில் ஸ்மார்ட் கார்டை ஸ்கேனர் கருவியில் வைத்துவிட்டு வெளியேற வேண்டும். ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்துக்குச் செல்பவர்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.
ஆனால் வயதானவர்கள் செல்லும்போது அலைச்சலே மிஞ்சுகிறது. குறிப்பாக சுரங்க நிலையத்தில் இருந்து உயர்நிலைப் பாதை நிலையங்களுக்கு செல்பவர்கள் கீழே சென்று ஸ்மார்ட் கார்டை தேய்த்துவிட்டு மீண்டும் ரயிலில் ஏற மேல் தளத்துக்குச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்ய மறந்துவிட்டால் மீண்டும் சுரங்க ரயில் நிலையத்துக்கு வரும்போது அபராதம் விதிக்கப்படும் அல்லது ஸ்மார்ட் கார்டில் இருக்கும் மிச்சப் பணம் பிடித்தம் செய்து கொள்ளப்படும். இது பயணிகளிடையே அலைச்சலை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற குறைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் சரி செய்தால் பெரும்பாலான மக்கள் விரும்பும் போக்குவரத்தாக மெட்ரோ ரயில் பயணம் மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com