அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்த இணையதள வசதி

அனுமதியில்லாத மனைப்பிரிவுகளை வரைமுறைபடுத்த, புதிய இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது.

அனுமதியில்லாத மனைப்பிரிவுகளை வரைமுறைபடுத்த, புதிய இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது.
வீட்டுவசதித் துறை மே 4 -ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையின்படி, சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலுள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை (unauthorized plots and
layouts) வரைமுறைப்படுத்த புதிய வரன்முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை எளிய முறையில் சமர்பிக்க www.tnlayoutreg.in எனும் புதிய இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்துவதற்காக செலுத்த வேண்டிய கட்டணத் தொகை உள்ளிட்ட விவரங்கள் இந்த புதிய இணையதளத்தில் தெளிவாக தரப்பட்டுள்ளது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com