எம்.பி.ஏ., எம்.சி.ஏ சேர்க்கை: ஜூன் 1 முதல் பதிவு செய்யலாம்

தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இயங்கி வரும் அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இயங்கி வரும் அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சேர்க்கையை கோவை அரசு பொறியியல் கல்லூரி நடத்துகிறது.
இதுகுறித்து அரசின் அறிவிப்பு:
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விரும்புவோர் www.gct.ac.in, www.tn-mbamca.com ஆகிய இணையதளங்கள் மூலம், வரும் ஜூன் 1 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்-லைன் பதிவுக்கு ஜூன் 30 கடைசி நாளாகும்.
பதிவு செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, ரூ. 300-க்கான விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
"செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவர் சேர்க்கை-2017, அரசு பொறியியல் கல்லூரி, கோவை 641013' என்ற முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களை சம்மந்தப்பட்ட இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com