பருவமழை: குடிநீர் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்குப் பருவமழை காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

வடகிழக்குப் பருவமழை காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து அந்த வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்குப் பருவமழை காலத்தைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்புப் பராமரிப்பு திட்டத்தின் மூலம் கழிவுநீர் கட்டமைப்புகள் அனைத்தும் 113 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 43 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 30 ஜெட்டிங் மற்றும் சக்ஸன் இயந்திரங்கள், மற்றும் 239 தூர்வாரும் இயந்திரங்கள் மூலம் தூர் வாரப்பட்டு வருகின்றன. பழுதடைந்த ஆள் நுழைவாயில் மூடிகள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் மாற்றப்பட்டு வருகின்றன. அனைத்து கழிவுநீரகற்று நிலையங்களும் மின் தடை காலத்திலும் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்துப் பகுதியிலும் குடிநீரின் தரம் தீவீரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தரக் கட்டுபாட்டு அலுவலகம், நாளொன்றுக்கு 100 லிருந்து 150 இடங்களில் கூடுதல் மாதிரிகள் மற்றும் நுண்ணுயிர் பரிசோதனைக்காக 30 முதல் 50 வரை கூடுதல் மாதிரிகள் எடுத்து பரிசோதித்து வருகிறது. குடிநீரில் தினமும் 2,000 இடங்களில் பரிசோதிக்கப்பட்ட குளோரின் அளவு தற்போது 3,000 இடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழைக்கால பணிகளைக் கண்காணிப்பதற்காக வாரியத்தின் மூத்த அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
புகார் தெரிவிக்க: 'எண்.1, பம்பிங் ஸ்டேஷன் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2' என்ற முகவரியில் அமைந்துள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேர சிறப்புப் பொது குறை தீர்க்கும் மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது குறைகளை 4567 4567 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com