'கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வேண்டும்'

மாணவர்கள் தங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வதுடன், பொதுமக்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சங்கர நேத்ராலாயா மருத்துவமனை மருத்துவர் சந்தானம்

மாணவர்கள் தங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வதுடன், பொதுமக்கள் மத்தியிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சங்கர நேத்ராலாயா மருத்துவமனை மருத்துவர் சந்தானம் வலியுறுத்தினார். 
பார்வை பாதுகாப்பு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை 'உலக பார்வை நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு விழி ஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பு சார்பில், விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தை சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனை மருத்துவர் சந்தானம் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், 'குழந்தைகளும், மாணவர்களும் தங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வதுடன், பொதுமக்கள் மத்தியில் கண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பின் தலைவர் கிருஷ்ணகுமார், பூங்கோதை செந்தில்குமார், கண் மருத்துவ நிறுவனத்தைச் சார்ந்தவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக பார்வை தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கும், முதியோர் இல்லத்தில் உள்ள வயோதிகர்களுக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com