சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாமல் தீபாவளியை கொண்டாட மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடி வெடிப்பதைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பொது மக்கள் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடி வெடிப்பதைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பொது மக்கள் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ரா.கண்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளியை ஒட்டிய இரு நாள்களில் நிலவும் பருவநிலை மற்றும் வானிலை முன்னறிக்கையின்படி, புகையானது இயல்பாக வளி மண்டலத்தில் கலப்பதற்கு உகந்த சூழல் தற்போது ஏதுவாக இல்லை என்பது தெரிகிறது. இதனால், முறையான புகைச்சிதறல் ஏற்படாததனால், தரைமட்டத்தில் புகையின் அளவு அதிகரிக்கும். இதனால், சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல், தொண்டை எரிச்சல், நுரையீரல் தொற்றும் ஏற்படுத்தி பொதுமக்களை பாதிப்படையச் செய்யும்.
தீபாவளியன்று இரவில் வளி மண்டலத்தில் நிலவும் குளிரின் தன்மையால் மாசு அடர்த்தி அதிகமாவதுடன், புகையுடன் கலந்த பனிப்புகை மூட்டமும் ஏற்படுகிறது. பொது இடத்தில் வெடி வெடிப்பதினால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் சேதம் மற்றும் மாசுகளால் உயிரினங்களின் பொதுச் சுகாதாரம் பாதிப்படைகிறது. இது மக்களை மட்டுமல்லாமல் பறவைகளையும், விலங்குகளையும் பாதிக்கிறது. செல்லப் பிராணிகள், தெருவில் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளையும் நினைவில் கொண்டு வெடி வெடிக்க வேண்டும்.
தீபாவளித் திருநாளில் வெடிக்கும் வெடிகளில் சுகாதாரக் கேட்டை உண்டாக்கக்கூடிய ஆபத்தான சல்பர்டை ஆக்ஸைடுகள் மற்றும் மாசு துகள்கள் மிக அதிக அளவில் உள்ளன. மேலும், அதில் வேதியியல் பொருள்களான ஆர்சனிக், சல்பர், மெக்னீசியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம் குளோரைடு, தாமிரம், துத்தநாகம் இருக்கின்றன.
இதனால் வளிமண்டலத்தில் மாசு ஏற்படுவதோடு, நமது சுவாச அமைப்புகளை பாதிக்கும் தன்மையை கொண்டுள்ளதாகவும் உள்ளது. ஆதலால், பொதுமக்கள் வெடி வெடிப்பதைக் குறைத்தும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும் இந்த இனிய தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com