இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: 2018 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு !

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வெளியிடப்படும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக தற்போது 2 வழித் தடங்களில் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 27 கி.மீ தூரம் பணிகள் முடிந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள இடங்களில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, அடுத்த ஆண்டு ஜூலைக்குள் மொத்த பணிகளையும் முடித்து மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவையின் 2-வது கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி வரை, சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என 3 வழித்தடங்களில் 107.55 கி.மீட்டருக்கு ரூ.85,047 கோடிக்கு திட்ட அறிக்கையை தயாரித்து அரசிடம் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து முதல் கட்டப் பணிகளுக்கான நிதி அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒதுக்கப்படும்.
ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க சுமார் 80 சதவீதம் சுரங்கப் பாதைகள் வழியாக மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விம்கோ நகர் வரை நீட்டிப்பு: மெட்ரோ ரயில் திட்டத்தில், வண்ணாரப்பேட்டையில் இருந்து, திருவெற்றியூர் விம்கோ நகர் வரை, 9.2 கி.மீ., தூரத்துக்கான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், வண்ணாரப்பேட்டை - தியாகராயர் கல்லுôரி - கொருக்குப்பேட்டை வரை, 2 கி.மீ., பாதை சுரங்கத்திலும், கொருக்குப்பேட்டையில் இருந்து, திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, 7.2 கி.மீ., துôரம் உயர்நிலைப் பாலத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
இப்பணியில், வண்ணாரப்பேட்டை - கொருக்குப்பேட்டை இடையே, சுரங்கப்பாதை பணியில், ஒரு வழி பாதை பணி முடிந்தது. இரண்டாவது பாதை பணி, டிசம்பரில் முடியும். கொருக்குப்பேட்டை - விம்கோ நகர் இடையே பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது. 
இப்பாதையில், 2019 டிசம்பருக்குள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com