தமிழக மக்கள் நலன் கருதி மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணி வருகிறோம்

தமிழக மக்களின் நலன் கருதியும் மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணி வருகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுகவின் 46-ஆவது ஆண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வீர வாள் பரிசளிக்கிறார் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன்.
அதிமுகவின் 46-ஆவது ஆண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வீர வாள் பரிசளிக்கிறார் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன்.

தமிழக மக்களின் நலன் கருதியும் மத்திய அரசுடன் நல்லுறவைப் பேணி வருகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தாம்பரத்தில் அதிமுக 46-ஆம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் 1972-இல் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கம் அதிமுக. மற்ற கட்சிகளைப் போல் அதிமுகவில் குடும்ப, வாரிசு அரசியல் இல்லை.
ஜனநாயக முறைப்படி செயல்பட்டு வரும் அதிமுக உழைப்பு, விசுவாசத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து இன்று வரை கடைப்பிடித்து வரும் கட்சியாகத் திகழ்ந்து வருகிறது. 
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு எதிர்ப்பு, சோதனை, துன்பத்தை எதிர்கொண்டு, அதிமுகவைக் கட்டிக் காத்து, தமிழ்நாட்டில் 27 ஆண்டுகள் ஆட்சி நடத்திய கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகின்றது. பல தொண்டர்களின் உயிர்த் தியாகத்தால், உழைப்பால் உயர்ந்த இந்த இயக்கத்தை அழிக்கவோ சிதைக்கவோ உடைக்கவோ யாராலும் முடியாது.
மத்திய அரசுக்கு அடிமையா?: இந்த ஆட்சி, மத்திய அரசிற்கு அடிமையாக உள்ளது என்ற தவறான தகவலை சிலர் பரப்பி வருகிறார்கள். தமிழகத்திற்குத் தேவையான நல்ல பல திட்டங்களைக் கொண்டு வருவதற்கும், வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெறவும் மத்திய அரசுடன் நல்லுறவைக் கடைப்பிடித்து வருகிறோம்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்கள் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவைக் கடைப்பிடித்ததைப் போல் நாங்களும் கடைப்பிடித்து வருகிறோம்.
தற்போது பெரும்பான்மை பலத்துடன் சிறப்பாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் எந்தக் குறையும் கூற முடியாமல், டெங்கு காய்ச்சல் பிரச்னையைக் கிளப்பி உள்ளனர். டெங்கு காய்ச்சல் பருவ மழை காலங்களில் ஆண்டுதோறும் வருகிறது. இதைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் .
மாவட்டந்தோறும் துறைச் செயலாளர்கள், கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பியுள்ளன. மழை நீர் வீணாகாமல் தடுப்பணை கட்டி நீரைப் பெருக்க ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் ரூ.350 கோடிக்கு தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்ஜமின், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com