அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாத 5700 பேர் சிக்கினர்

சென்னையில் அசல் ஓட்டுநர் இல்லாமல் வாகனம் ஓட்டிய 5700 பேர் சிக்கினர். இவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததோடு அறிவுரையும் கூறினர்.

சென்னையில் அசல் ஓட்டுநர் இல்லாமல் வாகனம் ஓட்டிய 5700 பேர் சிக்கினர். இவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்ததோடு அறிவுரையும் கூறினர்.
வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அசல் ஓட்டுநர் உரிமல் இல்லையென்றால், 500 ரூபாய் அபராதம் மற்றும் மூன்று மாதம் சிறைத் தண்டனை என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்தது. இந்த உத்தரவை அடுத்து, அசல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வாகன ஓட்டிகள் பலர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குவிந்தனர்.
இந்த நிலையில், ஆறு விதிமீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் . தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களிடமும், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களிடமும் அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படாது. அவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1.அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல், 2. அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல், 3. குடி போதையில் வாகனம் ஓட்டுதல், 4. சிக்னலில் எல்லையைத் தாண்டுதல், 5. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், 6. சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல் இந்த 6 விதி மீறல்களுக்கு மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என்று போலீஸார் தெளிவுபடுத்தினர்.
இதையடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இந்த 6 விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீஸார் அசல் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் ஒரு வாரத்தில் மட்டும் 5,700 பேர் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பிடிபட்டுள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அசல் ஓட்டுநர் உரிமம் உள்ளதா எனக் கண்டறிவதற்கு என தனியாக சோதனை ஏதும் நடத்தப்படவில்லை. வழக்கமான சோதனையின்போது விதிமீறியவர்களிடம் அசல் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என சோதனையிடுகிறோம். அவ்வாறு அசல் ஓட்டுநர் இல்லாதவர்களிடம் அதற்கும் சேர்த்து அபராதம் விதிக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com