இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி: கூடுதல் ரயில்கள் நாளை இயக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி ரசிகர்கள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பறக்கும் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரை - திருமயிலை: சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு சென்னை சேப்பாக்கத்துக்கு 12.40, மணிக்கும் திருமயிலைக்கு 12.49 மணிக்கும் சென்றடையும். மறுமார்க்கமாக திருமயிலையில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு சேப்பாக்கத்துக்கு 1.10 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு 1.20 மணிக்கும் சென்றடையும்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி: சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு சேப்பாக்கத்துக்கு 10.40 மணிக்கும், திருமயிலைக்கு 10.49 மணிக்கும், வேளச்சேரிக்கு இரவு 11.15 மணிக்கும் சென்றடையும்.
வேளச்சேரியில் இருந்து இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு, திருமயிலைக்கு 11.40 மணிக்கும், சேப்பாக்கத்துக்கு 11.50 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கும் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com