கோயம்பேட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்

கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ற 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ற 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தமிழகத்தில் புகையிலை, குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புகையிலை பொருள்கள் விற்பவர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் அந்தக் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த சின்மயா நகரைச் சேர்ந்த சக்திவேல், சாத்தான் குளத்தைச் சேர்ந்த சுந்தர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அவர்கள் மொத்தமாக வாங்கி சென்னையில் பல்வேறு சில்லறை வியாபாரிகளுக்கு விற்று வந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com