ஆப்பிரிக்க பெண்ணிடமிருந்து ரூ. 1 கோடி போதைப் பொருள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆப்பிரிக்கப் பெண்ணிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆப்பிரிக்கப் பெண்ணிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தில்லியில் இருந்து சென்னை வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் ஆப்பிரிக்க நாடான மலாவி நாட்டைச் சேர்ந்த பெண், எபிடிரைன் எனும் போதைப் பொருளைக் கடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து சனிக்கிழமை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் போதைத் தடுப்புப் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிலியா எடீனா (40) என்ற ஆப்பிரிக்க (மலாவி நாடு ) பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் 22 கிலோ எபிடிரைன் என்ற போதைப் பொருளை கடத்தி வருவது தெரியவந்தது. 
இதனையடுத்து அவரிடமிருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்ததுடன், டிலியா எடீனாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ஆப்பிரிக்க நாடான
மலாவியைச் சேர்ந்தவர் என்றும், இந்த போதைப் பொருளை சென்னை விமான நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்து ஜாம்பியா நாட்டுக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com