மாலத்தீவுகளின் கௌரவ துணை தூதராக ஹிஸாமுதீன் பாப்பா நியமனம்

சென்னைக்கான மாலத்தீவுகளின் கௌரவ துணை நிலை தூதராக டாக்டர் ஹிஸாமுதீன் பாப்பாவை மாலத்தீவு அரசு நியமித்துள்ளது. 

சென்னைக்கான மாலத்தீவுகளின் கௌரவ துணை நிலை தூதராக டாக்டர் ஹிஸாமுதீன் பாப்பாவை மாலத்தீவு அரசு நியமித்துள்ளது. 
டாக்டர் ஹிஸாமுதீன் பாப்பா, மார்பு மற்றும் காசநோய் மருத்துவ நிபுணராகவும், ஹூமா சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். மாலத்தீவுவை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தூதரக உதவிகளுக்கு "மாலத்தீவுக்கான 
கௌரவ தூதரகம்" 786, அண்ணா சாலை, நந்தனம், சென்னை -35 என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொண்டோ அல்லது 91- 44 4390 0100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ கேட்கலாம். இதுதவிர, அலைபேசியில் 91- 96001 50555(பணி நேரத்துக்கு பின்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 
honconsul@maldivaschennai.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். மாலத்தீவு அரசின் செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com