வலிமையான இந்தியா அமைய 5 விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்

வலிமையான இந்தியா அமைய மற்றவர்கள் கஷ்டத்தை உணர்வது, சேவை செய்வது, தூய்மையாக இருப்பது, ஒருங்கிணைப்பு, சேர்ந்து பிரார்த்தனை செய்வது ஆகிய 5 விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர்
சென்னையில் சேவாபாரதி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சேவா சங்கமம் 2017 நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவார் படத்துக்கு மரியாதை செலுத்தும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. உடன்,
சென்னையில் சேவாபாரதி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சேவா சங்கமம் 2017 நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவார் படத்துக்கு மரியாதை செலுத்தும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. உடன்,

வலிமையான இந்தியா அமைய மற்றவர்கள் கஷ்டத்தை உணர்வது, சேவை செய்வது, தூய்மையாக இருப்பது, ஒருங்கிணைப்பு, சேர்ந்து பிரார்த்தனை செய்வது ஆகிய 5 விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
தமிழ்நாடு சேவா பாரதி சார்பில், ""சேவா சங்கமம் சென்னை 2017'' நிகழ்ச்சி சென்னை கொரட்டூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தென் பாரத தலைவர் இரா.வன்னியராஜன் முன்னிலை வகித்தார். 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு பேசியது: உங்களுடன் 5 எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு எண்ணமும் ஆங்கில வார்த்தை எஸ் -இல் இருந்து ஆரம்பிக்கும். நமக்கு இந்த 5 விஷயங்கள் அவசியம்.
முதல் விஷயம் சம்ஸ்காரம் -அதாவது, மற்றவர்கள் துன்பத்தை உணர்ந்து, நல்லது செய்வது ஆகும். மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் அடுத்தவரிடம் திருட மாட்டார்கள். ஏமாற்ற மாட்டார்கள். 
நமது சொந்த முயற்சியில் பெற முயற்சிக்கிறோம். எப்போது நாம் சொந்த உழைப்பில் முன்னேற நினைக்கிறோமோ அன்று நல்ல மனிதராக மாறுகிறோம். எனவே, முதல் பன்பு மற்றவர்கள் கஷ்டத்தை உணர்வது ஆகும். மற்றவர்களை கஷ்டத்தை உணரக் கூடிய பண்பு இருந்ததால், தானாகவே சேவை செய்யத் தொடங்குவோம்.
சேவை இரண்டாவது பண்பு. காவல்துறை சேவை, அரசியல் சேவை, ஆட்சியர் சேவை எதுவுமே மற்றவர்கள் கஷ்டத்தை உணர்ந்தால், சேவையாக செய்வோம். நமது நன்மைக்காக அல்லாமல் நாட்டுக்கு சேவையாக செய்வோம். சேவை மனப்பான்மை இல்லை என்றால் தூய்மையாக இருக்க முடியாது. 
தூய்மை 3-ஆவது விஷயம். தூய்மை என்பது எண்ணத்திலும் இருக்க வேண்டும். புற உடலிலும் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியும் இருக்க வேண்டும். தூய்மைக்காக வேலை செய்வது ஒரு பெரிய சேவை. நமது சுற்றுப்புற தூய்மையாக இருந்தால், நமது உடல்நிலை நன்றாக இருக்கும். எனவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து இருப்பது மூலம் தேசத்தின்ஆரோக்கியமானதாக இருக்கிறது.
4-ஆவது விஷயம் ஒருங்கிணைப்பு. ஒருங்கிணைப்பு மூலம் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. எல்லா துறைகளும், அமைப்புகளும் ஒருங்கிணைந்தால்தான் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு உறுப்பினரும் குழுவாகி வலுவானதாக இருக்கிறது. ஒருங்கிணைப்பில் இருக்கும் நாம் மற்றவர்களுக்கு நல்ல பண்புகளை சொல்லி கொடுக்க வேண்டும். 
5-ஆவது விஷயம் சத்சங்கம். நாம் எல்லாரும் சேர்ந்து இறைவனை பிரார்த்திப்பது சத்சங்கம் ஆகிறது. சத்சங்கம் வெளியே தொடங்குவது இல்லை. நமது வீட்டில் தான் ஆரம்பிக்கிறது. சேர்ந்து சாப்பிடுவது, பிரார்த்தனை செய்வது, பாடுவது மூலம் அமைதியாக இருக்க முடியும். அமைதியாக இருந்தால் தான் சேவை செய்ய முடியும். ஒரு வலிமையான பாரதம் அமைய இந்த விஷயங்களை (சம்ஸ்கார், சேவா, சுவஜ், சங்கடன், சத்சங்கன்) சொல்லி கொடுக்க வேண்டும். இதைப் பின்பற்றினால் அமைதியாக இருக்க முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மட மேலாளர் சுவாமி விமுர்த்தானந்த ஜி மகராஜ் பேசுகையில், பிற தொண்டு நிறுவனங்கள் பெறக்கூடிய உதவித் தொகையை 55 சதவீத சேவைக்காகவும், 45 சதவீத விளம்பரப்படுத்துவதற்காகவும் செலவிடுகிறார்கள். சேவா பாரதி உள்ளிட்ட இந்து சமய சேவை இயக்கங்கள் தாங்கள் பெறும் நிதிஉதவியை 100 சதவீதம் என்றால் 110 சதவீம் சேவை அளிக்கின்றனர். சேவை செய்பவர்களுக்கு லட்சியம் இருக்க வேண்டும். இந்த லட்சியம் தேசியத்தையும், தெய்வீகத்தையும் வளர்த்தெடுப்பது நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் அகில பாரத சேவா பிரமுக் ஸ்ரீ பராக் அப்யங்கர், சேவா சங்கமம் தலைவர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். சேவா சங்கமம் கண்காட்சியில், குழந்தைகளுக்கு இலவச டியூசன் வகுப்பு , பண்பாடு வகுப்பு, கணினி வகுப்பு, தையல் பயிற்சி உள்பட பல்வேறு சுய தொழில் பயிற்சி , பார்வையற்றவர்கள், மாற்று திறனாளிகளுக்கு சேவை, தொழில் பயிற்சி உள்பட 150-க்கும் அதிகமான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com