மருந்தாளுநர், நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு: 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் இரண்டரை ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் இரண்டரை ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த அரசின் செய்திக் குறிப்பு: பாளையங்கோட்டை மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டு இரண்டரை ஆண்டு கால அளவுள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப் படிப்பு மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பினை ரூ. 350-க்கான வரவோலையை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். வரைவோலை இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை, சென்னை - 106 என்ற பெயருக்கு எடுக்கப்படவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 28 கடைசித் தேதியாகும்.
விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: விண்ணப்பங்களை சென்னையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம். பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகர்கோயில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை சுகாதாரத் துறையின் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org  என்ற சுகாதாரத் துறையின் இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com