டி.ஜி. வைணவக் கல்லூரியில் 'இலக்கிய இன்பம்'

சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரியில் தமிழ்த் துறை மாணவர்கள் நடத்திய 'இலக்கிய இன்பம்' என்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரியில் தமிழ்த் துறை மாணவர்கள் நடத்திய 'இலக்கிய இன்பம்' என்ற விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய உரைகள் நிகழ்த்தப்பட்டன. விழாத் தொடக்கத்தில் 'போதும் என்பதே பொன் மனம்' எனும் தலைப்பில் மாணவி எஸ்.புவனேஸ்வரி உரையாற்றினார். அதேபோல 'திருவாசகத்தில் அச்சப்பத்து' எனும் தலைப்பில் மாணவி ரா.ஜனனி உரையாற்றினார். பாரதியாரின் தேசப்பக்திப் பாடல்களும் பாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாரதியும் - வ.உ.சிதம்பரனாரும் என்ற தலைப்பில் செ.செல்லப்பிள்ளை நிகழ்த்திய உரை மாணவர்களுக்கு பல அரிய தகவல்களைக் கொண்டதாக அமைந்தது. கல்லூரி முதல்வர் இரா.தணிகைவேல், ''தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவர்கள் எதையும் சாதிக்க முடியும், தனிமனித வளர்ச்சிக்கு மொழி ஒரு தடை இல்லை'' என்று கூறினார்.
முன்னதாக ''நாங்கள் பன்னீரா கேட்டோம், தண்ணீர் தானே கேட்டோம் உழுவதற்கு'' என்ற உழவர்களின் கூற்றாக மாணவர் இயற்றிய கவிதை வரிகளை தமிழ்த் துறை தலைவர் ப.முருகன் முன் வைத்து முன்னிலை உரையாற்றினார். மாணவத் தலைவி எஸ்.அனிதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com