கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த சென்னைத் துறைமுக கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் திங்கள்கிழமை பிற்பகல் வாபஸ் பெறப்பட்டது. 

கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வந்த சென்னைத் துறைமுக கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் திங்கள்கிழமை பிற்பகல் வாபஸ் பெறப்பட்டது. 
வாடகை உயர்வு, ஒதுக்கீடு, வாடகை பணம் பட்டுவாடா உள்ளிட்டவை கோரிக்கைகள் குறித்து மேற்கொண்ட ஒப்பந்தங்களை சரக்குப் பெட்டக நிலையங்களை சரிவர செயல்படுத்தவில்லை எனக் கூறி சில கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கங்கங்கள் வெள்ளிக்கிழமை திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கின. 
பின்னர் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வதாக அறிவித்தன. இதனால், சென்னை, காட்டுப்பள்ளி, காமராஜர் துறைமுகங்களில் சரக்குப் பெட்டகங்கள் மூலம் நடைபெற்று வந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடியோடு நின்றது.
கடந்த மூன்று நாள்களாக வேலைநிறுத்தம் நீடித்த நிலையில் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சென்னைத் துறைமுகத் தலைவர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் கன்டெய்னர்கள் லாரிகள் அனைத்தும் வடசென்னை பகுதியில் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், சரக்குப் பெட்டக நிலையங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்டோரை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சஷாங் சாய் திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பேசினார். 
அப்போது இருதரப்பினரும் கலந்து பேசி விரைவில் பிரச்னைகளைத் தீர்ப்பதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. 
இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தம் திங்கள்கிழமை பிற்பகல் வாபஸ் பெறப்பட்டு லாரிகள் ஓடத் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com