சென்னை விமான நிலைய வளாகத்தில் வாகன நெரிசலைக் குறைக்க சோதனை முயற்சி

வாகனங்களின் நெரிசலைத் தவிர்க்கவும், கால விரயத்தைக் குறைக்கவும் சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் சோதனை முயற்சி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 

வாகனங்களின் நெரிசலைத் தவிர்க்கவும், கால விரயத்தைக் குறைக்கவும் சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் சோதனை முயற்சி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
சென்னை விமான நிலையத்துக்குள் பெரும்பாலான பயணிகள் கார்களில் வந்து செல்கின்றனர். விமான நிலைய வளாகத்துக்குள் நுழையும் வாகனங்கள், உள்நாட்டு முனையம் வழியாக வந்து, பயணிகளை இறக்கிவிட்டதும், பன்னாட்டு முனையம் வழியாக வெளியேறுகின்றன. தற்போது ஒரே வழியாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு வாகனங்கள் சென்று விட்டு ஒரே பாதையில் வெளியேறுகின்றன. இதனால் காலதாமதம் ஏற்படுவதுடன் அனுமதிக்கப்பட்ட கால அளவு முடிந்து விட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் பயணிகளை அவசரப்படுகின்றனர். இதனால் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. சில நேரங்களில் சுங்கச்சாவடி ஊழியர்களிடமும் வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபடுவதும் உண்டு. இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கென தனித்தனியே சுங்கச் சாவடிகளை அமைத்துள்ளனர்.
தனித்தனி சுங்கச் சாவடிகள் வழியாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையத்துக்கு வாகனங்களை அனுப்பும் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமையும் இதே நேரத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி, உள்நாட்டு முனையத்துக்கு வரும் வாகனங்கள் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வழியில் வெளியேற வேண்டும். அதேபோல் பன்னாட்டு முனையத்துக்குச் செல்லும் வாகனங்கள் விமான நிலைய காவல் நிலையம் வழியாகச் சென்றுவிட்டு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெளியேற வேண்டும். இந்த சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற பிறகு இதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அதற்கான மாற்று ஏற்பாடு குறித்தும் அறிந்துகொள்ள ஏதுவாக பயணிகள், வாகன ஓட்டிகள் கருத்துகள் அறியப்படும். அதன் பிறகு இந்த சோதனை ஓட்டப் பாதையில் வாகனங்கள் பயணிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com