குழந்தை கடத்தல் தடுப்பு: ரயில்வே காவல் அதிகாரிகளுக்குப் பயிற்சி

குழந்தை கடத்தல் தடுப்பு குறித்து ரயில்வே காவல் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குழந்தை கடத்தல் தடுப்பு குறித்து ரயில்வே காவல் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஐஜேஎம், சைல்டுலைன் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை ரயில்வே காவல் துறையின் கூடுதல் டிஜிபி சி. சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். 
இதில், குழந்தை, பெண்கள் கடத்தல் தடுப்பு, விபச்சார தடுப்புச் சட்டம், மாநிலங்களுக்கு இடையிலான குடிபெயரு வோருக்கானச் சட்டம், கொத்தடிமைத் தொழில் ஒழிப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் சட்டம் ஆகியவை குறித்து காவல் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது. 
இதில், தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 84 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சி முகாமில், ரயில்வே காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆனி விஜயா, வழக்குரைஞர்கள் டேவிட், ஐஜேஎம் அமைப்பின் நிர்வாகி தேவசித்தம், சைல்டுலைன் அமைப்பின் நிர்வாகி ரூபன், தீபக் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com