கர்ப்ப காலத்தில் சர்க்கரை: 7 இல் ஒரு குழந்தைக்கு பாதிப்பு

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் 7 இல் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்று
கர்ப்ப காலத்தில் சர்க்கரை: 7 இல் ஒரு குழந்தைக்கு பாதிப்பு

கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் 7 இல் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்று டாக்டர் பாலாஜி சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் வி.சேஷைய்யா கூறினார்.
 இந்திய கர்ப்பகால சர்க்கரை நோய் கல்விக் குழுவின் 13-ஆவது ஆண்டு கருத்தரங்கம் சனிக்கிழமை மகாபலிபுரத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் டாக்டர் வி.சேஷைய்யா பேசியது:
 கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிரந்தரமாக சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு 20 மடங்கு வாய்ப்பு அதிகம்.
 இதன் மூலம் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் சர்க்கரை நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
 உலக அளவில் கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் ஏழில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றார்.
 மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.பாலாஜி பேசுகையில், சர்க்கரை நோய் பாதுகாப்பு மையம் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் கர்ப்பிணிகளில் 16.55 சதவீதம் பேர் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே முறையான பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு
 நடவடிக்கைகளை மேற்கொள்வதே கருவுற்ற தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும், அடுத்து வரும் தலைமுறைக்கும் பாதுகாப்பானது என்றார் அவர்.
 தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்டோர் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com