வனத்துறை கண்காணிப்பில் கழுதைப் புலி

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி ஓடிய கழுதைப் புலி பிடிபட்ட பிறகு வனத் துறையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 
பிடிபட்ட கழுதைப் புலி
பிடிபட்ட கழுதைப் புலி


சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி ஓடிய கழுதைப் புலி பிடிபட்ட பிறகு வனத் துறையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஸ்ரீசாமராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஜோடி கோடிட்ட கழுதைப் புலிகள், தலா ஒரு ஜோடி ஆண் இந்திய காட்டு மாடு, லேடி அம்ஹர்ஸ்ட் கோழி, குள்ளநரி, தங்க நிறக் கோழி, சாரஸ் கொக்கு, கருப்பு அன்னப்பறவை, ஈகிளக்டஸ் கிளி ஆகியவை கடந்த வாரம் கொண்டு வரப்பட்டன. 
இந்த வன விலங்குகள் 3 வார கால மருத்துவக் கண்காணிப்புக்குப் பின் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வனத் துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
கழுதைப் புலி மாயம்: இந்நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 4 கழுதைப் புலிகளில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் கழுதைப் புலி திங்கள்கிழமை மாலை மாயமானது. அந்தக் கழுதைப் புலி பூங்கா வளாகத்துக்குள் உள்ள வனப் பகுதியில் சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மாட்டு இறைச்சியுடன் 5 கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டில் கழுதைப் புலி செவ்வாய்க்கிழமை காலை சிக்கியது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பிடிபட்டுள்ள கழுதைப் புலியை தனியான கூண்டில் வைத்து கவனித்து வருகிறோம். இடமாற்றத்தால் அந்தக் கழுதைப் புலி சற்று பயத்தில் உள்ளது. பூங்கா சூழ்நிலைக்கு பழகிய பின் பொதுமக்கள் பார்வைக்கு கழுதைப் புலி வைக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com