டிரெயின் 18' அதிநவீன ரயில் பெட்டிகள் விரைவில் தயாரிப்பு: ஐசிஎஃப் பொது மேலாளர் தகவல்

நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன வசதிகள் கொண்ட டிரெயின் 18' என்ற பெயரிலான ரயில் பெட்டிகள், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் 
சென்னை ஐசிஎஃப்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார் அதன் பொது மேலாளர் எஸ்.மணி.
சென்னை ஐசிஎஃப்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார் அதன் பொது மேலாளர் எஸ்.மணி.


நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன வசதிகள் கொண்ட டிரெயின் 18' என்ற பெயரிலான ரயில் பெட்டிகள், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) விரைவில் தயாரிக்கப்பட உள்ளன என்று அதன் பொது மேலாளர் மணி தெரிவித்தார்.
சென்னை ஐசிஎஃப் சார்பில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், ஐசிஎஃப் பொது மேலாளர் எஸ். மணி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் பேசியது:
2017-18-ஆம் ஆண்டில் ஐசிஎஃப் 2,503 ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது. இது ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை காட்டிலும் 39 ரயில் பெட்டிகள் அதிகம். அத்துடன் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 226 பெட்டிகள் அதிகமாகும்.
நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன வசதிகள் கொண்டடிரெயின் 18' என்ற பெயரிலான ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎஃபில் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன. இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மும்முனை டீசல் மின் தொடர் ரயில் பெட்டிகள், 1,600 குதிரைத் திறன் கொண்ட குளிர்சாதன வசதியுடன்கூடிய மின் தொடர் வண்டிகள் ஐசிஎஃபில் தயாரிக்கப்பட உள்ளன என்றார் அவர். 
இந்த நிகழ்ச்சியில் ஐசிஎஃப் ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தெற்கு ரயில்வே சார்பில்: தெற்கு ரயில்வே சார்பில் பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில், ரயில்வே பாதுகாப்பு முதன்மை தலைமை ஆணையர் பிரேந்திர குமார் உள்ளிட்ட அதிகாரிகள், தெற்கு ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com