ஸ்ரீ ராமச்சந்திரா பட்டமளிப்பு விழா: 845 மாணவர்களுக்கு பட்டம்

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் 28-ஆவது பட்டமளிப்பு விழா போரூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 845 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கிய ஸ்காட்லாந்து க்ளாஸ்கோ ராயல் மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் டேவிட் ஜெ.காலோவே. 

மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 72 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோ ராயல் கல்லூரியின் தலைவர் டாக்டர் டேவிட் ஜெ.காலோவே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 
க்ளாஸ்கோ ராயல் கல்லூரியின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஸ்டீவ் கிரஹாம், கல்லூரியின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், துணைவேந்தர் டாக்டர் பி.வி.விஜயராகவன், இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன், ஆய்வுத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: முன்னதாக க்ளாஸ்கோ ராயல் கல்லூரியின் எம்.ஆர்.சி.பி., எம்.ஆர்.சி.எஸ்., எஃப்.ஆர்.சி.எஸ். போன்ற பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வு மற்றும் பயிற்சி மையம் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் தொடங்குவதற்கான புரிந்துணைர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. 
க்ளாஸ்கோ ராயல் கல்லூரியின் தலைவர் டாக்டர் டேவிட் ஜெ.காலோவே, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் துணைவேந்தர் டாக்டர் பி.வி.விஜயராகவன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com