17-இல் பாஸ்போர்ட் சிறப்பு மேளா

சென்னையில் வரும் 17-ஆம் தேதி சிறப்பு கடவுச்சீட்டு மேளா நடைபெறும்.

சென்னையில் வரும் 17-ஆம் தேதி சிறப்பு கடவுச்சீட்டு மேளா நடைபெறும்.
இதுதொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இதற்காக சாலிகிராமம், தாம்பரம், அமைந்தகரை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் சேவை அலுவலங்கள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வழக்கமான வேலை நாளாக இயங்கும்.
விண்ணப்பங்கள் வழக்கம்போல ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒதுக்கப்பட்ட நேரங்களில் பரிசீலிக்கப்படும். இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் தோராயமாக 2050 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள்.
இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கு பெற விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தின் www.passportindia.gov.in என்ற வலைதளத்தில்
பதிவு செய்து விண்ணப்ப பதிவு எண் (ARN:Application Register Number)- ஐப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தி நேரம் பெற வேண்டும்.
இந்த மேளாவில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு எண், கொடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றுக்கான நகல், தேவையான அனைத்து அசல் ஆவணங்கள் சான்றொப்பமிட்ட ஒரு படி நகல் ஆவணங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். பிசிசி பிரிவில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டது.
பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த மேளாவுக்கான நேர ஒதுக்கீடுகள் பிப்ரவரி 14 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பங்கள் கட்டாயமாக இணையத்தில் பதிவு செய்யப்பட்ட நேர ஒதுக்கீடுகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும். பதிவு செய்து நேர ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள், நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com