ஒரு டன் போலி டீத்தூள் பறிமுதல்: கடை ஊழியர் கைது

சென்னை கொத்தவால்சாவடியில் ஒரு கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் இருந்த ஒரு டன் போலி டீத்தூளையும், போலி சோப்புகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

சென்னை கொத்தவால்சாவடியில் ஒரு கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் இருந்த ஒரு டன் போலி டீத்தூளையும், போலி சோப்புகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளைத் தெருவில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரசாத் (46) என்பவர் டீத்தூள், சோப்பு மொத்த விற்பனைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பிரபல நிறுவனங்களின் தயாரிப்பு பொருள்களின் பெயரில் போலிப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் கொத்தவால்சாவடி போலீஸார், புதன்கிழமை அந்தக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் அந்தக் கடையில், பிரபல டீத்தூள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் இருந்த போலி டீத்தூள் பாக்கெட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். 
இதில் மொத்தம் ஒரு டன் டீத்தூள் கைப்பற்றப்பட்டது. இதேபோல அங்கிருந்த போலி சோப்பு பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, கடையின் ஊழியர் ராஜஸ்தானைச் சேர்ந்த மல்லாராம் (32) கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவான கடையின் உரிமையாளர் பிரசாத் தேடப்பட்டு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com