சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற விழாவில் சென்னை விமான நிலைய மேம்பாடு ஆலோசனைக் குழுத் துணை தலைவரும், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான இ.கருணாநிதி, 
சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற விழாவில் சென்னை விமான நிலைய மேம்பாடு ஆலோசனைக் குழுத் துணை தலைவரும், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினருமான இ.கருணாநிதி, 

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு ரூ 33 லட்சம் நிதி உதவி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை விமான நிலைய ஆணையம் ரூ 32.6 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை விமான நிலைய ஆணையம் ரூ 32.6 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற விழா சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சென்னை விமானநிலைய மேம்பாடு ஆலோசனைக்குழுத் துணை தலைவரும்,பல்லாவரம் சட்டப் பேரவை உறுப்பினருமான இ.கருணாநிதி முன்னிலையில் சென்னை விமான நிலைய இயக்குநர் சந்திரமெளலியும், மாநகராட்சி மண்டல மேலாளர் ராமமூர்த்தியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் விமான நிலைய இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறியது: மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 2 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 100 டன் குப்பைகளைத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் கையாண்டு மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணியில் சென்னை விமான நிலைய ஆணையம் பெருநிறுவன சமுதாய பொறுப்புத் திட்டத்தின்கீழ் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
தூய்மைப்பணித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சி 60 சென்ட் இடம் ஒதுக்கித் தந்துள்ள இடத்தில் கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை செயல்படுத்த ரூ32.6 லட்சம் நிதி வழங்கி உள்ளோம்.
சென்னை விமான நிலைய ஆலோசனைக்குழு துணைத் தலைவர் இ.கருணாநிதி சமுதாய பங்களிப்புத் திட்டத்தின்கீழ்,விமான நிலைய சுற்றுவட்டாரப்பகுதிகளில் மருத்துவமனை, அரசு,நகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கான மேஜை, பெஞ்ச் உதவி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை, பரிந்துரைகளை ஆய்வு செய்து ரூ 5 கோடி வரை நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளோம் என்றார் அவர்.
பல்லாவரம் கண்டோன்மென்ட் தலைமை செயல் அதிகாரி அஜீத் ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com