ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் 12 ஆயிரம் அன்னப்பிளவு சிகிச்சைகள்

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் 12 ஆயிரம் அன்னப்பிளவு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் துணை வேந்தர் பி.வி.விஜயராகவன் தெரிவித்தார்.

சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் 12 ஆயிரம் அன்னப்பிளவு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் துணை வேந்தர் பி.வி.விஜயராகவன் தெரிவித்தார்.
 சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையும், அமெரிக்காவின் ஸ்மைல் டிரெயின் நிறுவனமும் இணைந்து இலவச அன்னப்பிளவு சீரமைப்பு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.
 12 ஆயிரம் சிகிச்சைகள்: இதுவரை 12 ஆயிரம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதையொட்டிசனிக்கிழமை நடைபெற்ற மருத்துவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் துணைவேந்தர் டாக்டர் பி.வி.விஜயராகவன் தலைமை வகித்தார்.
 சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நடிகர் நாசர், ஸ்மைல் டிரெயின் நிறுவன துணைத் தலைவர் மம்தா கரோல் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கொண்டு அன்னப்பிளவு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட பேராசிரியர் டாக்டர் ஜோத்ஸ்னா தலைமையிலான மருத்துவக் குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். சிகிச்சை பெற்ற 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com