போகி பண்டிகை: காற்று மாசை கண்காணிக்க 15 இடங்களில் ஆய்வு

போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசை கண்காணிக்க சென்னையில் 15 இடங்களில் ஆய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசை கண்காணிக்க சென்னையில் 15 இடங்களில் ஆய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இதைத் தவிர்க்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர், பிளாஸ்டிக் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.
இவ்வாண்டும் சுற்றுச்சூழல் மாசுக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்வித் துறையின் மூலம் புகை மாசு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகையின்போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று மாசைக் கண்காணிப்பு செய்வதற்காக, வாரியம் போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப் பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்று மாதிரியை சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com