அரங்கில் புதிது...

அரங்கில் புதிது...

ஜமீன் கோயில்கள்
ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு
வெ ளியீடு : சூரியன் பதிப்பகம்
விலை : ரூ. 140
குறிப்பு : ஜமீன்தாரர்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும் , பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம்.

திருக்குறள் கதைகள் 50
ஆசிரியர் : லதா
வெ ளியீடு : அருண் பதிப்பகம்
விலை : ரூ. 150
குறிப்பு : கடவுள் நம்பிக்கை, அறிவே பலம், நன்றி மறவாதே, விருந்தோம்பல், உழைப்பின் உயர்வு, நல்ல நட்பு, நீதி தவறாமை உள்ளிட்ட தொகுப்புகளைக் கொண்ட குழந்தைகளுக்கான நூல் இது.

விடுதலைப் போரில் தமிழ் முஸ்−ம்கள் (புதிய செய்திகள்)
ஆசிரியர் : அ.மா.சாமி
வெ ளியீடு : கலாம் பதிப்பகம்
விலை : ரூ. 250
குறிப்பு : இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் முஸ்லிம்களின் பங்கு எத்தகையது என்பதை எடுத்துரைக்கும் நூல் இது. மொழி, இனம், நாடு என்பதைத் தாண்டி தமிழ்நாட்டு முஸ்லிம்களின் மொழிப்பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளை உள்ளடக்கியது.

வெற்றி வாகை 
( உங்கள் தொடர் வெற்றியின் திறவுகோல்)
ஆசிரியர் : பரமன் பச்சைமுத்து
வெ ளியீடு : மணிவாசகர் பதிப்பகம்
விலை : ரூ. 150
குறிப்பு : வெற்றியை தக்க வைத்துக்கொள்ள ஏதேனும் விதிகள் உள்ளனவா? அப்படி வெற்றி விதிகள் எதுவும் இருந்தால், அவற்றை நம் வாழ்வில் சரியாகச் செலுத்தி வெற்றியாளனாக உச்சியில் நிற்கலாமே என்று நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நிற்கும் இந்நூல்.

குட்டி ஆகாயம் (சிறார் இதழ்)
ஆசிரியர்கள் : நிழல், காந்தி
வெ ளியீடு : வானம் அமைப்பு
விலை : ரூ. 40
குறிப்பு : குழந்தைகள் உருவாக்கிய புத்தகம்: இது குழந்தைகளுக்கான சிறுகதை தொகுப்புப் புத்தகம். இந்த புத்தகத்தை உருவாக்கியது முழுக்க முழுக்க குழந்தைகளே, ஒருவர் ஒரு வரி சொல்ல, அடுத்தவர் அடுத்த வரி சொல்ல குட்டி குட்டி சிறுகதைகளை உருவாக்கி, அதற்கான ஓவியங்களையும் அழகாக தீட்டி இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது இதன் சிறப்பு.

உடைந்த குடை
ஆசிரியர் : தாக் ஸþல்ஸ்தாத்
வெ ளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூ. 140
குறிப்பு : உலகின் மிக முன்னேறிய, அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் விடைகாண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலம் தனது அடையாளத்தை தேடித்தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதை இந்நூல் சித்தரிக்கிறது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்.
படங்கள்:
பி.ராதாகிருஷ்ணன்,
கே. அண்ணாமலை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com