என்னை செதுக்கிய புத்தகங்கள்

என்னை செதுக்கிய புத்தகங்கள் பல உண்டு. சித்தர் புத்தகங்கள், சித்தர் பாடல்கள் நிறைய படிப்பேன். அதில் அமைதியை அறிந்து கொண்டேன்.
என்னை செதுக்கிய புத்தகங்கள்

என்னை செதுக்கிய புத்தகங்கள் பல உண்டு. சித்தர் புத்தகங்கள், சித்தர் பாடல்கள் நிறைய படிப்பேன். அதில் அமைதியை அறிந்து கொண்டேன். அவ்வையார் பாடல்கள், திருக்குறள், நாலடியார் இவையெல்லாம் எனக்குள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறையை வகுத்துக் கொடுத்தவை. இவைத் தவிர மூதுரை, பட்டினத்தார் பாடல்கள், குனங்குடி மஸ்தான் சாஹிப்பின் பாடல்கள், அருணகிரிநாதருடைய பாடல்கள் இவைகள்தாம் என்னைச் செதுக்கிய புத்தகங்கள். இன்னும் பல முக்கியமான புத்தகங்கள் என்னுடைய வாசிப்பில் உண்டு. இவையெல்லாம் படிக்கப் படிக்க தீராத விஷயங்கள். 
புத்தகங்கள் வாசிப்பது என்பது நல்ல விஷயம். அதிலும் நல்ல நல்ல புத்தகங்களைத் தேடித்தேடி வாசிப்பது ரொம்ப நல்ல விஷயம். நம் முன்னோர்கள் எழுதி வைத்த விஷயங்களைப் படித்து கடைப்பிடிப்பது நம்மை செம்மைப்படுத்தப் புத்தகங்கள் உதவிபுரிகின்றன. 'கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக' இது வள்ளுவன் வாக்கு. இதை நல்லப் புத்தகங்கள் படிப்பதனால் மட்டுமே உணர முடியும். 
வாசிப்பில் என் கருத்து: மனிதன் என்பவன் யார்? அவனுக்குள் இருக்கக் கூடிய விஷயங்கள் என்ன? எப்படி வாழ வேண்டும்? என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக் கூடாது? இவையெல்லாமே புத்தகங்களில் இருக்கின்றன. மனிதனுடைய எல்லா வகையான தேடல்களுக்கும் புத்தகங்களில் பதில்கள் பொதிந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் ஓதி உணரும்பொழுது நமக்குள் ஒரு ஞானம் பிறக்கிறது. அதை நம்முடைய வாழ்க்கையின் வழிமுறையாக எடுத்துக் கொண்டு வாழ்ந்தாலே இப்பிறப்புக்குண்டான பயன் கிடைத்துவிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com