எழுத்துலகம் எதிர்கொள்ளும் சவால்கள் : எழுத்தாளர் சிவசங்கரி

எழுத்துலகம் எதிர்கொள்ளும் சவால்கள் : எழுத்தாளர் சிவசங்கரி

எழுத்துலகம் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானது எலக்ட்ரானிக் மீடியா. கண்ணால் பார்க்க முடிகிறது, காதால் கேட்க முடிகிறது,

எழுத்துலகம் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானது எலக்ட்ரானிக் மீடியா. கண்ணால் பார்க்க முடிகிறது, காதால் கேட்க முடிகிறது, வண்ணங்களோடு வருகிறது, ஒலிகளோடு வருகிறது, உணர்ச்சிகளோடு இருக்கிறது. அதுவே, புத்தகமாகப் படிக்கும்போது வாசகரே இதையெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
தானாகக் கற்பனை செய்யும்போது வாசகரே ஓர் எழுத்தாளராகிறார். தன்னுடைய கற்பனைகளை அதில் சேர்த்து தனக்குப் பிடித்த மாதிரி அதை நடத்திக் கொண்டு போகும்போது அவர் ஒரு எழுத்தாளராகிறார். இது மிகப் பெரிய அனுபவம்.
இந்த அனுபவத்தை ரசித்தவர்கள் என்றைக்கும் புத்தகம் வாசிப்பதை நிறுத்த மாட்டார்கள். பொதுவாக புத்தகம் படிக்கும் போது ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு நிறுத்திக் கொள்ளலாம். முந்தைய பக்கத்தைத் திருப்பிப் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பக்கத்தைப் புரட்டிப் பார்க்கலாம். புத்தகத்தைப் படிக்கும் போது நேரமும், கற்பனை சக்தியும் நம் வசம் இருக்கிறது. அதனால் நமக்கு ஒரு தனி அனுபவத்தைப் புத்தகம் படிக்கும் பழக்கம் தருகிறது. 
எலக்ட்ரானிக் மீடியாவில் அப்படியல்ல. நாம் யோசிப்பதற்குள் காட்சி மாறிவிடும். தொலைக்காட்சியைப் பொருத்தவரை நம்மை சிந்திக்கவிடாமல் அதுவே சிந்தித்து கொடுத்து விடுவதால்தான் மேலை நாடுகளில் தொலைக்காட்சி வந்தபோது 'இடியட் பாக்ஸ்' என்று சொன்னார்கள்.
அப்படி ஏன் சொன்னார்கள் என்றால், நம்மை சுயமாக சிந்திக்கவிடாமல் அது நமக்காக சிந்தித்து வெளிக்கொணர்கிறது. ஆனால் மக்களுக்கு அதன் மீது ஒரு கவர்ச்சி இருக்கிறது. தொலைக்காட்சி பண்முகத் திறன் கொண்டது. கண்ணால் பார்க்க முடிகிறது. காதால் கேட்க முடிகிறது. இதனால் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமாக உள்ளன. 
இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய சவால் என்று நான் நினைப்பது வாசிக்கும் பழக்கத்தை, வாசிப்பை ரசிக்கும் பழக்கத்தைப் பெரியவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கத் தவறிட்டோம். நிறைய வீடுகளில் கதை சொல்லிக் குழந்தைகளை வளர்க்கவில்லை. தொலைக்காட்சியைக் காட்டியே வளர்க்கிறார்கள். இணையதளம், ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி, கட்செவி அஞ்சல், முகநூல்
என உலகமே ஒரு நொடியில் கைக்குள் வந்துவிட்டது. இதுவும் ஒருவகையான போதையாக மாறிப்போனது. இதனால், எலக்ட்ரானிக் மீடியாவுடன் போட்டி போடுவதுதான் மிகப் பெரிய சவால்.
அதனால் புத்தகங்களை எங்கும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். பதிப்பாளர்கள் எல்லாம் ஊருக்கு நான்கு புத்தகக் கடையைத் திறந்து புத்தகங்களை வாங்கும்படி வைக்க வேண்டும். முன்பெல்லாம் ரயிலில்தான் அதிகம் பயணம் செய்வோம். ரயில் நிலையத்தில் பெரிய பெரிய புத்தகக் கடைகள் இருக்கும். எங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக்கொண்டு வாசித்துக் கொண்டே செல்வோம். அது போன்று விமான நிலையத்தில் புத்தகம் கிடைக்கும். எங்காவது சின்ன ஊர்களுக்குப் போனாலும் புத்தகக் கடை இருக்கும். இப்போது அது எல்லாம் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இப்போது சில புத்தகங்களை வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. 
இ-புக்ஸ்: 50 புத்தகங்களையும் கூட ஒரு கையடக்க கருவியில் அடக்கி விடலாம். இ- புக்ஸ் என்பதை ஒரு சவால் என்று சொல்ல முடியாது. அது நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடு என்றே சொல்ல 
வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com