புதுமையான புத்தக வெளியீட்டு விழா!

முதன்முதலாக 1977-இல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற பதிப்பகங்களில் மணிமேகலைப் பிரசுரமும் ஒன்று.
புதுமையான புத்தக வெளியீட்டு விழா!

முதன்முதலாக 1977-இல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற பதிப்பகங்களில் மணிமேகலைப் பிரசுரமும் ஒன்று.
தமிழத்தின் முக்கியப் பிரபலங்களான நீதிபதிகள் தமிழ்வாணன், சொக்கலிங்கம், ராமசுப்பிரமணியன், விமலா, துக்ளக் சோ, இயக்குநர்கள் பாலசந்தர், பாக்யராஜ், ராஜேந்தர் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், நெப்போலியன், நடிகைகள் சுகன்யா, சிநேகா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு நீதியரசர் வள்ளிநாயகம் எழுதிய மறவாதிரு மனமே, முனைவர் லேனா தமிழ்வாணன் எழுதிய வீழ்வதற்கல்ல வாழ்க்கை உள்ளிட்ட 41 நூல்களை வெளியிட இருக்கிறோம். இவற்றின் விலை ரூ.3800. 
ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்கக் கண்டங்களிலும், ஜப்பான், சீனா,ரஷியா, பர்மா ஆகிய நாடுகளிலும் தமிழ்ப் புத்தக கண்காட்சிகளை நடத்தியிருக்கிறோம். 
புத்தகங்களைப் பற்றி...ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு புத்தகம்தான் - வின்ஸ்டன் சர்ச்சில். உலக வரை படத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறீர்களா? ஒரு நூலகத்துக்குச் செல்லுங்கள் - டெஸ்கார்டா.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடித்து விட வேண்டும் என்பதற்காக தன் அறுவை சிகிச்சையை அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கச் சொன்னார் அறிஞர் அண்ணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com