பொங்கல் பொருள்கள்: கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம்

பொங்கல் பண்டிகைக்குத் தேவையான கரும்பு, வெல்லம் உள்பட பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக சென்னை கோயம்பேட்டில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்
சென்னை வடபழனி ஆர்க்காடு சாலையில் பார்வையாளர்கள் கண்ணைக் கவரும் வகையில் மயிலிறகு, ஜிமிக்கிகள் கொண்டு பெங்களூர் மாணவி காமாட்சியால் உருவாக்கப்பட்டுள்ள பொங்கல் பானைகள். (வலது) சென்னை கோயம்பேடு மார்க்கெட்ட
சென்னை வடபழனி ஆர்க்காடு சாலையில் பார்வையாளர்கள் கண்ணைக் கவரும் வகையில் மயிலிறகு, ஜிமிக்கிகள் கொண்டு பெங்களூர் மாணவி காமாட்சியால் உருவாக்கப்பட்டுள்ள பொங்கல் பானைகள். (வலது) சென்னை கோயம்பேடு மார்க்கெட்ட

பொங்கல் பண்டிகைக்குத் தேவையான கரும்பு, வெல்லம் உள்பட பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக சென்னை கோயம்பேட்டில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். 
கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் கடந்த 6}ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்புச் சந்தை செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக முதல் சில நாள்களுக்கு விற்பனை மந்தமாக இருந்தது. இந்தநிலையில் வெள்ளிக்கிழமை முதல் பேருந்துகள் சீராக இயக்கப்பட்டதால், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் சிறப்பு சந்தையில் குவிந்தனர். 
வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.16) வரை நடைபெற உள்ள இந்த சிறப்புச் சந்தையில் மொத்த விலையில் 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.300}க்கும், சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.30}க்கும் விற்கப்படுகிறது. மஞ்சள் செடிகள் மொத்த விலையில் 10 செடிகள் கொண்ட கொத்து ரூ.100}க்கும், சில்லறை விலையில் 2 செடிகள் கொண்ட கொத்து ரூ.20 முதல் ரூ.50 வரையும் விற்கப்படுகிறது.
சாமந்திப் பூ 1 முழம் ரூ.10, கதம்ப பூ, கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.20}க்கு விற்கப்படுகிறது. ஒரு பூசணிக்காய் (சுமார் 5 கிலோ) ரூ.70, ஒரு தேங்காய் ரூ.35, மாவிலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு சீப்பு ரூ.30 முதல் ரூ.60 வரை, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5}க்கு விற்கப்படுகிறது. சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.30}க்கு விற்கப்படு கிறது.
காய்கறிகளைப் பொருத்தவரை, மொச்சை, துவரை ஆகியவை கிலோ ரூ.50, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அவரை கிலோ ரூ.40}க்கு விற்கப்படுகிறது. பழங்களை பொருத்தவரை ஆப்பிள் கிலோ ரூ.120, மாதுளை ரூ.100, ஆரஞ்சு ரூ.70. சாத்துக்குடி ரூ.50}க்கு விற்கப்படுகிறது.
கரும்பு விலை குறைந்தது ஏன்? இந்த சிறப்பு சந்தைக்கு, மதுரை, சிதம்பரம், சேத்தியாதோப்பு போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 200 லாரிகளுக்கு மேல் கரும்பு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஒரு கட்டு கரும்பு ரூ.400}க்கு விற்கப்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்னை, அரசு முன்கூட்டியே விடுமுறை அறிவித்தது, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் குறுகிய காலத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்துக்கு தயாராக முடியாதது போன்ற காரணங்களால் கரும்பு விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு ஒரு கட்டு ரூ.300}க்கு விற்க வேண்டியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று அனைத்துப் பொருள்களும் ஒரே இடத்தில் மலிவாக வாங்கிக் கொள்ளலாம். அதற்காகவே இந்தச் சிறப்புச் சந்தைக்கு வருகிறோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com