ஜீவா நினைவு நாள்: இ.கம்யூ கட்சி மரியாதை

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அவருடைய உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அவருடைய உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்டோர் பங்கேற்று, ஜீவாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஜீவா சிறப்பு மலரும், நவம்பர் புரட்சியின் நூறாவது ஆண்டு நிறைவு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டன. இதில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு நிறைவு மலரை கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா வெளியிட, கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டி பெற்றுக்கொண்டார். ஜீவா மலரை மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட, ஜீவாவின் மருமகள் விஜயலட்சுமி மணிக்குமார் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.ராஜா, 'மத்திய பாஜக ஆட்சி காரணமாக மக்களுக்கு பல்வேறு கடுமையாக நெருக்கடிகள் உருவாகி வருகின்றன. இயல்பு வாழ்க்கை அச்சம் சூழ்ந்ததாக மாறிப்போயிருக்கிறது. தலித்துகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இதை எதிர்த்து நாம் இன்று போராட வேண்டிய கட்டாயம் உள்ளது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com