அரங்கில் புதிது...

அரங்கில் புதிது...

பாலாற்றங்கரை தெய்வங்கள்
ஆசிரியர் : ப்ரியன் ( ஆர். சீனிவாசன்)
வெளியீடு : திருவரசு புத்தக நிலையம்
விலை : ரூ.80
குறிப்பு : தமிழ்நாட்டில் நான்கு மாவட்ட ங்களில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கும் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோயில்களில் குடிகொண்டுள்ள தெய்வங்களின் புராண வரலாறும், ஆலயங்களின் தொன்மைச் சிறப்பும் குறித்து நேரில் சென்று பார்த்தும், ஆய்ந்தும் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.

உச்சி சூரியனில் முளைக்கும் பனை
ஆசிரியர் : திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்
வெளியீடு : வெற்றிமொழி பதிப்பகம்
விலை : ரூ. 60
குறிப்பு : நிலம், நீ கேள், எச்சில் சாராயம், லெதர், கசாப்புக்காரி போன்ற 35-க்கும் மேற்பட்ட கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு இந்நூல். 

மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக
ஆசிரியர் : சாண்ட்ரா போஸ்டல்
வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்
விலை : ரூ. 70
குறிப்பு : இந்தியாவில் நீர்வளமும், நிலவளமும் பண்டைக் காலத்தில் மிகவும் சிறந்த முறையில் இருந்தன. ஆனால் தற்போது மழைப் பொழியும் அளவில் இருந்து ஒவ்வொரு குடிமகனுக்குக் கிடைக்கும் நிலவளத்திலும்- நீர்வளத்திலும் பாதிக்கும் சற்று குறைவாகவே தமிழ் மக்களுக்குக் கிடைக்கிறது. எனவே, தமிழர்களாகிய நாம் நிலம் மற்றும் நீரை மிகவும் நல்ல முறையில் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லையென்றால் தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயமிருக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது இந்நூல்.

வேனல்
ஆசிரியர் : கலாப்ரியா
வெளியீடு : சந்தியா பதிப்பகம்
விலை : ரூ. 460
குறிப்பு : நமது தலைமுறைகளுக்கு ஒரு நிலப்பரப்பை, ஊரை, இனத்தை, சூழலை, ஒரு குடும்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, மீட்சியை நுணுக்கமாக விவரிப்பதன் மூலமாக மானுடத்தின் முழு வரலாற்றையும் விவரிக்கிற நாவல் இது. 

மாலுவின் டயரி
ஆசிரியர் : ஞாநி
வெளியீடு : ஞானபானு
விலை : ரூ. 225
குறிப்பு : இப்புத்தகம் குழந்தைகளுக்கானது. தகவல்கள் வழியாக வாழ்க்கை பற்றிய ஒரு பார்வை, மதிப்பீடுகளுக்கான தேவை இரண்டையும் கேள்விகள் கேட்பதும், பதில்களைத் தேடுவதுமாக இருக்கும் இந்நூலில் பத்து முதல் 16 வயது வரை உள்ள ஒவ்வொரு சிறுமியும், சிறுவனும் தங்களை இதில் சந்திக்கலாம்.


அப்ஸரஸ்
ஆசிரியர் : மனோஜ்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : ரூ.90
குறிப்பு : கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு இந்நூல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com