கற்றதும் பெற்றதும்: சோம. வள்ளியப்பன்

என்னைச் செம்மைப்படுத்தியதில் பெரும் பங்கு திருக்குறளையே சேரும். விவேகானந்தரின் சொற்பொழிவு புத்தகங்கள், 'எழுந்திரு - விழித்திரு' 12 தொகுப்புகளும் நான் திரும்பத் திரும்ப படிக்கும் புத்தகங்கள்.
கற்றதும் பெற்றதும்: சோம. வள்ளியப்பன்

என்னைச் செம்மைப்படுத்தியதில் பெரும் பங்கு திருக்குறளையே சேரும். விவேகானந்தரின் சொற்பொழிவு புத்தகங்கள், 'எழுந்திரு - விழித்திரு' 12 தொகுப்புகளும் நான் திரும்பத் திரும்ப படிக்கும் புத்தகங்கள். 'ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்' போன்றவை என்னைச் செதுக்கிய புத்தகங்கள். 
அதுபோன்று தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொன்னியின் செல்வன், சுஜாதா, சா. கந்தசாமி, ஜெயகாந்தன் இவர்களின் நூல்கள் என்னை மிகவும் ஈர்த்தவை. சமீபத்தில், என்னை மிகவும் கவர்ந்தது கம்பன்தான். 
காரைக்குடி கம்பன் கழகத்துக்காக ஒரு சொற்பொழிவாற்ற சென்றிருந்தேன். அதற்காக கம்ப ராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் தேடிப் பிடித்து படித்தேன். மேலாண்மை நூல்களுக்கான சாராம்சம் அதில் பொதிந்து கிடப்பதை அறிந்து வியந்து போனேன்.
ராமன், அனுமன், இராவணன், ஜாம்பவான் என அனைத்து கதாபாத்திரங்களிலும் உள்ள சோகம், அரவணைப்பு , ஆளுமைத் திறன் என அனைத்தும் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. அது வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'ஏ மேனேஜ்மெண்ட் குரு கம்பன்' என நவீன தலைப்பில் புத்தகமாகவே தொகுத்துள்ளேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ராமாயணம் இன்றும் பொருந்துகிறது என்றால் அது மிகவும் வியப்பாக இருக்கிறது.
அதுபோன்று ஆங்கில எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். காவே எழுதிய 'செவன் ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபக்டிவ் பியூப்புள்' ( 7 ஏஹக்ஷண்ற்ள் ர்ச் ஏண்ஞ்ட்ப்ஹ் உச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் டங்ர்ல்ப்ங்) நூலும் என்னைக் கவர்ந்த நூல். நூல்களை படிக்க படிக்கத்தான் அது நம்மை செம்மைப்படுத்துகிறது. அதனால் எல்லோரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல நூல்களை படிக்க பழக்கிக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com