பதிப்பகத் துறையில் 98 ஆண்டுகள்!: சுப்பையா

பபாசி நடத்தும் அனைத்து புத்தகக் காட்சியிலும் தவறாமல் இடம் பிடித்திருப்பது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். திருநெல்வேலியில் கடந்த 1920 -ஆம் ஆண்டு திருவரங்கம் பிள்ளை, சுப்பையா பிள்ளை சகோதரர்களால்
பதிப்பகத் துறையில் 98 ஆண்டுகள்!: சுப்பையா

பபாசி நடத்தும் அனைத்து புத்தகக் காட்சியிலும் தவறாமல் இடம் பிடித்திருப்பது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். திருநெல்வேலியில் கடந்த 1920 -ஆம் ஆண்டு திருவரங்கம் பிள்ளை, சுப்பையா பிள்ளை சகோதரர்களால் தொடங்கப்பட்ட இப்பதிப்பகம் தற்போது 98 -ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.
இதுகுறித்து 5 -ஆவது தலைமுறையாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நடத்தி வரும் சுப்பையா முத்துக்குமாரசாமி கூறியது:
எங்கள் முன்னோரின் ஆசியோடு தமிழுக்கு இயன்ற அளவுக்கு 98 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறோம். தமிழ், தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இலக்கியம் சார்ந்த பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளோம். இதுவரை 4,560 தலைப்புகளில் நூல்கள் வெளிவந்துள்ளன. 270 நூலாசிரியர்களை உருவாக்கியுள்ளோம். 
கழகத் தமிழ் அகராதி, திருமந்திரம், திருக்குறள் (மு.வ.உரை), திருக்குறள் சொல்லடைவு, ஆலயங்களின் உட்பொருள் விளக்கம், சைவ-சித்தாந்த சாத்திரங்கள் போன்ற நூல்களுக்காக அதிக அளவிலான வாசகர்கள் எங்கள் பதிப்பகத்தைத் தேடி வருவர். குறிப்பாக மு.வ. உரையெழுதிய திருக்குறள் இதுவரை 296 பதிப்புகளைக் கண்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிப்பகத் துறைக்குள் நுழைந்தபோது இந்தத் திருக்குறள் புத்தகத்தின் விலை ஒரு ரூபாயாக இருந்தது. 
இந்த ஆண்டு தமிழக வரலாற்றில் பல்லவர் காலம், சங்ககாலம், ஆங்கிலேயர் காலம் என்ற நூலை பதிப்பித்துள்ளோம். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோன்று மேற்கோள் விளக்கக் கதைகள் என்ற 400 தொகுதிகள் கொண்ட நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது சொற்பொழிவாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். 
தொழில் நிறுவனங்களின் வரவேற்பு கூடத்தில் ஒரு நூலகத்தை அமைக்க வேண்டும் என்ற கருத்தை எங்களின் பதிப்பகத்தின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் வந்து தங்களின் விசிட்டிங் கார்டை கொடுத்தால் அவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள மனித வள மேம்பாடு தொடர்பான நூலை இலவசமாக வழங்குவோம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com