பத்தாம் வகுப்பு மாணவர் இறந்த வழக்கு: பள்ளி தாளாளர் மீதும் வழக்கு

சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் இறந்த வழக்கில், தாளாளர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.

சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் இறந்த வழக்கில், தாளாளர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
திரு.வி.க.நகர் 17-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முரளி மகன் நரேந்தர். இம்மாணவர், பெரம்பூர் பல்லவன் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற நரேந்தர் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து மாணவரின் தந்தை முரளி, திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில், தனது மகன் நரேந்தர் பள்ளிக்கு தாமதமாக வந்ததால் உடல்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு முட்டிப்போட்டு நடக்கும் 'டக்வாக்' தண்டனை அளித்துள்ளார். இந்நிலையில், நரேந்தர் மயங்கி விழுந்து இறந்துள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தார். இப்புகாரின் அடிப்படையில் திரு.வி.க.நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், 'டக்வாக்' தண்டனையால் நரேந்தர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், தலைமையாசிரியர் அருள்சாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் ஜெய்சிங்கை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அருள்சாமியிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பள்ளியின் தாளாளர் ஜோசப் பெர்னாண்டஸும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது கவனக்குறைவாக உயிர் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, சிறுவனை சித்ரவதை செய்தது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
இவ்வழக்குத் தொடர்பாக ஜோசப்பை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com