மாதாந்திர பயண அட்டை புதிய கட்டணம்: இம்மாத இறுதிக்குள் நிர்ணயம்

பேருந்துக் கட்டண உயர்வால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீசன் டிக்கெட், மாதாந்திர பஸ் பாஸ் ஆகியவற்றுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

பேருந்துக் கட்டண உயர்வால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீசன் டிக்கெட், மாதாந்திர பஸ் பாஸ் ஆகியவற்றுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதனால் இம்மாத இறுதிக்குள் இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
பேருந்துக் கட்டண உயர்வையடுத்து சென்னை மாநகரில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர பஸ் பாஸ், சீசன் டிக்கெட், ஒருநாள் பாஸ் ஆகியவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பஸ் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததால் புதிதாக சீசன் டிக்கெட்டோ, தினசரி பயண அட்டையோ வழங்கப்படவில்லை.
எவ்வளவு உயரக்கூடும்? ஒருநாள் முழுவதும் பயணம் செய்வதற்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகஉயர வாய்ப்புள்ளது.அதேபோல மாதாந்திர கட்டணம்ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com