டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்.
டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமுக்கு கல்லூரி முதல்வர் இராம கணேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், எய்ட்ஸ் நோய் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மட்டுமல்லாமல் அது குறித்து சமுதாயத்தில் உள்ள மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழகத்தில் பயிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் பயிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதில் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலர்கள் டி.எஸ். பிரேமா, ப.முருகன், பா.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com