ஆலந்தூர் குடிநீர் நிலைய பராமரிப்புப் பணி: லாரியில் குடிநீர் பெற செல்லிடப்பேசி எண்கள்

சென்னை ஆலந்தூர் குடிநீர் வழங்கும் நிலையத்தில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள்

சென்னை ஆலந்தூர் குடிநீர் வழங்கும் நிலையத்தில் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீர் பெற செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: குடிநீர் வாரியத்தின் சார்பில் ஆலந்தூர் குடிநீர் வழங்கும் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 9 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பக்தவச்சலம் நகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், கண்டோன்ட்மெண்ட் பகுதிகள், ராணுவ பயிற்சி நிலையம், மீனம்பாக்கம், பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் பகுதிகளுக்கு பராமரிப்புப் பணி நடைபெறும் நாள்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாது. 
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தெருக்களுக்கு அவசரத் தேவையாக லாரிகளில் குடிநீர் வேண்டுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 
தலைமை அலுவலகம் (புகார் பிரிவு)- 044- 28454040, 45674567
உதவிப் பொறியாளர் (லாரி விநியோகம்)- 81449 30158
துணைப் பகுதிப் பொறியாளர் (லாரி விநியோகம்- 81449 30235)
உதவிப் பொறியாளர் (ஆலந்தூர்)- 81449 30365
துணைப் பகுதிப் பொறியாளர் (மின்னியல்)- 81449 30262
பகுதிப் பொறியாளர்-81449 30912.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com