1500 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோய், தலசீமியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோய், தலசீமியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொண்டோரின் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், வங்கதேசம், தான்சானியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்து கொண்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறுகையில் 1995-ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் முதன்முதலாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்றுவரை 1,500-க்கும் மேற்பட்டோருக்கு இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜையை தானமளிக்க பலர் முன்வர வேண்டும் என்றார். மருத்துவமனையின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com