பெரம்பூரில் எல்.எச்.பி. பெட்டி பராமரிப்புக்காக புதிய மையம்

பெரம்பூர் ரயில் பெட்டி பராமரிப்புப் பணிமனையில் எல்.எச்.பி. என்ற நவீன பெட்டி (ஏர் பிரேக் சிஸ்டம்) பராமரிப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

பெரம்பூர் ரயில் பெட்டி பராமரிப்புப் பணிமனையில் எல்.எச்.பி. என்ற நவீன பெட்டி (ஏர் பிரேக் சிஸ்டம்) பராமரிப்புக்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. 
பெரம்பூர் ரயில் பெட்டி பராமரிப்புப் பணிமனையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அங்கு நவீன பெட்டியான ஏர் பிரேக் முறையிலான எஸ்.எச்.பி. பராமரிப்புக்கான மையத்தை அவர் தொடங்கி வைத்தார். இந்த மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களைப் பாராட்டி ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கினார்.
ரயில் பெட்டியின் பாதுகாப்பான இயக்கத்தில் எல்.எச்.பி.யின் ஏர் பிரேக் முறை முக்கிய பங்கு வகிக்கிறது. பழைய பெட்டிகளுக்கு மாற்றாக எல்.எச்.பி. என்ற நவீன பெட்டிகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு ஏற்ப பராமரிப்பு உள்பட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 
அதன்படி, எல்.எச்.பி. பெட்டி (ஏர் பிரேக் முறை) உள்நாட்டில் பழுதுபார்க்கும் மையம் அமைக்கும் நோக்கில் பெரம்பூர் கேரஜ் ஒர்க்ஸில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த வசதி மூலமாக, ஒரு பெட்டியின் வாழ்நாள் பராமரிப்பு செலவுக்கான தொகை ரூ.70 லட்சம் வரை கணிசமாக குறையும். இத்தகவலை தெற்கு ரயில்வே தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com