சின்னமலை-டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சின்னமலை- ஏஜி-டி.எம்.எஸ். இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து விரைவில்
சின்னமலை- டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற சோதனை ஓட்டத்தை பார்வையிட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், 
சின்னமலை- டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் திங்கள்கிழமை நடைபெற்ற சோதனை ஓட்டத்தை பார்வையிட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், 

சின்னமலை- ஏஜி-டி.எம்.எஸ். இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. இங்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை நேரு பூங்கா-விமான நிலையம், விமானநிலையம்- சின்னமலை மற்றும் ஆலந்தூர்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அண்ணாசாலையின் ஒரு பகுதியில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக, சின்னமலையில் இருந்து சைதாப்பேட்டைக்கு சுரங்கப் பாதையில் ரயில் செல்லும் அளவுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்) வரை 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையில் போக்குவரத்துக்கான பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளன. 
இந்நிலையில், இங்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், பொது மேலாளர் வி.கே.சிங் (சுரங்கம்) உள்பட பல அதிகாரிகள் பார்வையிட்டனர். அவர்களின் மேற்பார்வையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மெட்ரோ ரயில் சோதனையோட்டம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியது: சென்னை சின்னமலை-தேனாம்பேட்டை (ஏ.ஜி.-டிஎம்எஸ்) இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்துள்ளது. இந்தப் பாதையில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏ.ஜி-டி.எம்.எஸ். ஆகிய 4 ரயில் நிலையங்கள் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த பாதையில் சுரங்கத்திற்குள் காற்று செல்வதற்கான பாதை, சிக்னல்கள், பிளாட்பாரம், ஸ்டீல் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் டிக்கெட் கவுன்டர்கள், பயணிகளுக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்போது, இந்தப்பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்தை தொடங்க தயார் நிலையில் இருக்கிறோம். 
மறைமலை அடிகள் பாலத்தின் அருகில் மெட்ரோ ரயில் செல்லும்போது, அடையாறு ஆற்றை கண்டுகளிக்க முடியும். விரைவில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டதும், இந்தப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com