சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை

கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சிகள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் ஆகிய துறைகளில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டோருக்கான நியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார்.
473 பேருக்குப் பணி நியமன ஆணை: இதில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிக்காலத்தின்போது, காலமானவர்களின் வாரிசுகள் 198 பேருக்கும், நகராட்சிகளில் 214 பேருக்கும், சென்னை பெருநகர் குடிநீர், கழிவுநீரகற்று வாரியத்தில் 61 பேருக்கும் என மொத்தம் 473 பேருக்கு வாரிசு அடிப்படையில் இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர், உதவி வரைவாளர், பணி ஆய்வாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், வார்டு உதவியாளர், ஓட்டுநர், பூங்கா பணியாளர், களப் பணியாளர் போன்ற பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது: இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கடந்த காலங்களில் கோடைக் காலத்தை சமாளித்தது போன்று, இந்த ஆண்டு கோடைக் காலத்தை சமாளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோடைக் காலத்தில் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநர் சத்தியவிரத சாஹு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com